100 கோடி ரூபாய் மான நட்டஈடு : தோனியிடம் வாக்குமூலம் பதிவு!

நூறு கோடி ரூபாய் மான நட்டஈடு கோரி தாக்கல் செய்த வழக்கில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய, சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி சூதாட்ட வழக்கு தொடர்பாக, இடம்பெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை கூறியதாக, தெரிவித்துள்ள, மஹேந்திரசிங் தோனி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை, கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்று விசாரணை இடம்பெற்றபோது, வழக்கில் சாட்சி விசாரணையை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது