100 கோடி சீனி வரி மோசடி
சீனி மீதான வரியை மாற்றியமைத்ததில் பெரும் மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதன்படி, 25 சதமாக இருந்த வரி 50 சதமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு வரி அதிகரிப்புக்கு முன்னர் 22000 மெட்ரிக் டொன் 25 சத வரியில் சந்தைக்கு விடப்பட்டதன் காரணமாக அரசாங்கத்திற்கு 100 கோடி வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 22000 மெட்ரிக் டொன் சீனி இரகசியமாக வெளியிடப்பட்டதன் காரணமாகவே இந்த நஷ்டம் ஏற்பட்டதாகவும், இந்த நஷ்டங்களை தவிர்க்கும் வகையில், வட் மற்றும் தொழில் வல்லுநர்கள் மீது பாரிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் 44 ஆவது கட்டமாக மெதிரிகிரிய லங்காபுர மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று ஞாயிற்று கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இந்த சீனி மாபியாவில் அங்கம் வகிக்கும் கூட்டாளிகளை பாதுகாக்க அரசாங்கம் செயல்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற மோசடிகளுக்கு இடமளித்திருப்பது எதிர்காலத் தேர்தல்களில் ஆதாயம் அடையவா என்ற சந்தேகம் எழுவதாகவும், இந்த வரி மோசடியில் அரசாங்கம் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு மீண்டும் வரி விதிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்