
100 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
பசறை டெமேரியா ஏ பிரிவு மாத்தன்னை டிவிஷன் பகுதியில் வீட்டு தோட்டம் ஒன்றில் கஞ்சா பயிரிடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 1 அடி உயரமுள்ள 100 கஞ்சா செடிகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெமேரியா ஏ மாத்தன்னை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரையும் கஞ்சா செடிகளும் பசறை பொலிஸ் நிலையத்தில் விஷேட அதிரடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவர் நாளைய தினம் வெள்ளிக்கிழமை பசறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
