100 அடி உயரமான மரத்தில் ஏறி இளைஞன் போராட்டம்
இன்ஜெஸ்ரி தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், 100அடி உயரமான மரத்தில் ஏறி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.
ரம்புக்கனை தூப்பாக்கிசூட்டில் உயிர்ழந்த நபருக்கு நீதி கோரியே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். டிக்கோயா- இன்ஜெஸ்ரி கீழ் பிரிவைச் சேர்ந்த, 44வயதுடைய பழனியாண்டி முருகேஸ் என்ற நபரே இன்று வியாழக்கிழமை காலை இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ரம்புக்கனை பகுதியில் தூப்பாக்கி சூட்டில் பலியான நபருக்கு நீதி கோரியும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் ‘கோட்டா கோ கோம்’ போன்ற பதாதைகளை மரத்தில் காட்சிப்படுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.