10 பேரை கொன்ற துப்பாக்கிதாரியின் சடலம் மீட்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் பகுதியில் 10 பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தின் கொலையாளியைக் கண்டுபிடிப்பதற்கான பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

72 வயதான குறித்த சந்தேகநபர் ஆசியர் என தெரியவந்துள்ளது.

அப்பகுதியில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது

துப்பாக்கிச் சூட்டில் 5 பெண்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.