10 வயது சிறுவன் மலசலகூடத்திலிருந்து சடலமாக மீட்பு!

பொகவந்தலாவை பகுதியில் மாணவன் ஒருவன், தன்னுடைய வீட்டின் மலசலக்கூடத்துக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளான்.

ஓல்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்விப்பயிலும் 10 வயதான மாணவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதே, மலசலக்கூடத்துக்குள் சென்று இவ்வாறு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த மாணவனின் பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை பொலிஸார் இது தொடர்பான மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்