10 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 32 வயது இளைஞன் கைது

-கிளிநொச்சி நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயது இளைஞன் ஒருவன் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாமுனை கிராமத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞன் ஒருவன் குறித்த பத்து வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில், குறித்த மாமுனையை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருதங்கேணி பொலிஸாரால் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.