
10 வயது சிறுமி கொலை செய்யபட்டமைக்கு எதிர்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று காலை 10 மணியளவில் கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினால் இடம்பெறுகின்றது.
அண்மையில் தலைமன்னாரில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பத்து வயது சிறுமி கியானுசியாவின் படுகொலைக்கு நீதி கோரியும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டும், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்திடுவோம், சிறுவர் மகளிருக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க போன்ற வாசகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


