10 வயது சிறுமியின் தாக்குதலில் உயிரிழந்த 12 வயது சிறுவன்!

 

விளையாட்டு விபரீதமாகி இரும்புக்கம்பியால் வீசியடித்ததில்  படுகாயமடைந்த 12 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கட்டான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

விளையாடிக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட முறுகலில் 10 வயது சிறுமி கரும்புக் கம்பியை வீசியடித்ததில் 12 வயது சிறுவனின் தலையில்பட்டு படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார். .

கட்டுவப்பிட்டி சாந்த செபஸ்தியன் வித்தியாலயத்தில் 6 ம் வகுப்பில் கல்வி கற்கும் கஜசிங்ககே சேனால் ரன்தித வெனுருவன் சில்வா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சிறுவர்களின் தாய்மார் வெளிநாட்டில் வேலை செய்வதாகவும் இவர்கள் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிப்பதனால் பாடசாலை முடிந்து வந்து விளையாட்டில் ஈடுபடுவது வழமையாக இருந்துள்ளது.

இவ்வாறு விளையாடும் போது இருவருக்கிடையே சச்சரவு ஏற்படுவதுண்டு. சம்பவ தினத்தன்று விளையாடிக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட முறுகலில் சிறுமி கம்யால் சிறுவன் மீது வீசி அடிக்கவே அது சிறுவனின் தலையில்பட்டு சிறுவன் காணமடைந்துள்ளார்.

சுயநினைவிழந்திருந்த சிறுவன் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்த கொழும்பு தேசிய வைத்தியசிலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறுமியை கட்டான பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது சிறுமியை சிறுவர் நன்னடத்தை பிரிவில் அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளர்.