10 வது டாம்சோ சர்வதேச செஸ் விளையாட்டு போடியில் இராணுவ வீரர்கள் சாம்பியன்

ஹிக்கடுவ லவங்க ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட 10 வது னுயஅளழ (டாம்சோ) சர்வதேச செஸ் சம்பியன்ஷிப் போட்டியில், அரச மற்றும் வர்த்தக சேவை அணி பிரிவில் இலங்கை இராணுவ அணி அண்மையில் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலய பழைய மாணவர் சதுரங்க சங்கத்தினால் ஆறு நாள் சம்பியன்ஷிப் போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மே 27 முதல் 30 வரை நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை கடற்படை ‘பி’ மற்றும் இலங்கை கடற்படை ‘ஏ’ அணிகள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இரண்டாம் இடத்தை வென்றன.

இலங்கை செஸ் சம்மேளனம், ஆசிய சதுரங்க சம்மேளனம் மற்றும் உலக சதுரங்க சம்மேளனம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட போட்டியாக இந்த சம்பியன்ஷிப் போட்டி இடம்பெற்றுள்ளதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்