10 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது
-யாழ் நிருபர்-
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாதரவத்தை பகுதியில் 10 போத்தல் கசிப்புடன் 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கசிப்பினையும் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்
எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்