10 நாட்கள் விடுமுறை

பாராளுமன்றத்திற்கு 10 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தொடரை ஏப்ரல் 19ஆம் திகதி முதல் நடாத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளார்.

இதன்படி ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது.