ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
விலைக் குறைப்பு இன்று வியாழக்கிழமை நடைமுறைக்கு வரும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு,
ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1500 ரூபா
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 230 ரூபா
ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 339 ரூபா
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 218 ரூபா
உள்ளூர் சிவப்பரிசி ஒரு கிலோகிராமின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 155 ரூபா
ஒரு கிலோகிராம் உள்ளூர் நாட்டரிசி 7 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 188 ரூபா
பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 129 ரூபா
