கோயில் வளாகத்தில் மேடை சரிந்து விபத்து: பெண் உயிரிழப்பு

டெல்லியில் உள்ள கல்காஜி கோயில் விழாவையொட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முழுவதும் விழித்திருந்து துர்கை அம்மனை வழிபட பக்தர்கள் குவிந்தனர்.

இதன் காரணமாக, இரவு முழுவதும் பாடல், பஜனை, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக, கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவிற்காக எந்த முன்னனுமதியும் வழங்கபடவில்லை என துணை பொலிஸ் கண்காணிப்பாளர் ராஜேஷ் டியோ தெரிவத்துள்ளார்.

ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலை நிகழ்ச்சியை கண்டுகளித்துக் கொண்டிருந்த போது, நள்ளிரவு 12:30 மணி அளவில், மரம் மற்றும் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேடை சரிந்ததாலும், நெரிசலில் சிக்கியதாலும் 17 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, அனுமதியின்றி நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள் மீது டெல்லிபொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகள் நடாத்தி வருகின்றனர்.