
05 நாட்களுக்குப் பிறகு வங்கி பரிவர்த்தனைகள் ஆரம்பம்
05 நாட்கள் நீண்ட வங்கி விடுமுறைக்கு பிறகு அனைத்து வங்கிகளும் இன்று செவ்வாய் கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவை வழங்கப்படும். மேலும், 05 நாட்களுக்குப் பிறகு, பங்குச் சந்தையும் இன்று முதல் செயல்படும்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட சிறப்பு வங்கி விடுமுறையுடன் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் கடந்த வியாழன் முதல் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
