
ஹோமாகம இரசாயன தொழிற்சாலையில் தீ : ஆரம்ப கட்ட விசாரணைகள்
ஹோமாகம – கட்டுவன பகுதியில் வியாழக்கிழமை இரவு 8.30 அளவில் இரசாயன தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டது. குறிப்பிட்ட தொழிற்சாலையானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரன உள்ளிட்ட தரப்பினர் தீக்கரையான தொழிற்சாலைக்கு சென்று கண்காணிப்புக்களை மேற்கொண்டனர். இதன் போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கிய தொழிற்சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
தீயினை கட்டுப்படுத்துவதற்காக கோட்டே, தெஹிவளை – கல்கிசை மாநகர சபை மற்றும் ஹொரணை தீயணைப்பு பிரிவு என்பவற்றுக்கு உட்பட்ட 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
