ஹோட்டல் நீச்சல் குளத்தில் சிறுவன் மூழ்கி உயிரிழப்பு!

ஹோட்டல் நீச்சல் குளத்தில் சிறுவன் மூழ்கி உயிரிழப்பு!

ஓபநாயக்கவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழந்த துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவன் இம்புல்தென்னவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் தனது பெற்றோருடன் ஹோட்டலுக்கு வந்து, நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து ஓபநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.