ஹோட்டலின் மீது விழுந்த ஹெலிகொப்டர் : ஒருவர் உயிரிழப்பு!
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் கெயர்ன்ஸ் நகரத்தின் ஹோட்டல் ஒன்றின் மீது ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியதில் விமானி உயிரிழந்துள்ளார்.
ஹெலிகொப்டர் ஹோட்டலின் கூரைமீது விழுந்து நொருங்கியதை தொடர்ந்து பாரிய தீ மூண்டதாகவும், இதனை தொடர்ந்து ஹோட்டலில் காணப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹெலிக்கொப்டரில் இருந்த ஒரேயொரு நபர் உயிரிழந்துள்ளார் என குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் அனுமதிக்கப்படாத பயணத்தை மேற்கொண்டார் என ஹெலிக்கொப்டரை பயணங்களிற்கு வழங்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹோட்டலில் காணப்பட்டவர்களில் 80 வயது ஆண் ஒருவரும் 70 வயது பெண்ணும் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மழைபெய்துகொண்டிருந்த நிலையில் ஹெலிக்கொப்டர் மிகவும் தாழ்வாக பறந்தது அதன் விளக்குகள் ஒளிரவில்லை என ஒருவர் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பது போன்ற சத்தம் கேட்டது, அதன் பின்னர் தீ மூண்டது புகை எழுந்தது, ஹோட்டலில் இருந்த பலருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என ஹோட்டலின் நடவடிக்கைகளை மேற்பார்வைசெய்யும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்