ஹொட்பொட்டில் சிறுநீர் கழித்த சிறுவர்கள் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

சீனாவில் ஹொட்பொட்டில் (hot pot) சிறுநீர் கழித்த சிறுவர்கள் இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2.2 மில்லியன் யுவான் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் மிகப்பெரிய ஹொட்பொட் கிளைகளில் ஒன்றான ஹைடிலாவ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மதுபானம் அருந்தியபடி இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

சிறுவர்கள் சிறுநீர் கழித்த ஹொட்பொட்டிலிருந்த உணவை யாரும் உட்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் சம்பவத்திற்கு பின்னர் ஹைடிலாவ், உணவகத்தில் இருந்த ஆயிரக்கணக்கானோரின் உணவுக் கட்டணத்தைத் திருப்பித் தந்துள்ளது.

உணவகத்தின் நற்பெயருக்கும் செயல்பாடுகளுக்கும் ஏற்பட்ட சேதத்திற்காக 130,000 யுவானும், சுத்தம் செய்தல் மற்றும் சட்டச் செலவுகளுக்காக 70,000 யுவானும் அச்சிறுவர்களுக்கு நீதிமன்றத்தினால் அபராதமாக விதிக்கப்பட்டது.