
ஹெலிகொப்டர் விபத்து : 5 பேர் உயிரிழப்பு!
நேபாள தலைநகர் காத்மண்டுவில் வடமேற்கே மலைப்பகுதியில் நேற்று புதன்கிழமை ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
யூரோகாப்டர் ஏஎஸ்350 என்ற ஹெலிகாப்டர் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி மதியம் 1.54 மணிக்கு சைப்ருபேஷி நகரத்தை நோக்கி சென்றுள்ளது.
இந்நிலையில், புறப்பட்டு மூன்று நிமிடங்களில் ஹெலிகாப்டர் தொடர்பை இழந்ததாக நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகொப்டரில் ஒரு விமானியும், சீனாவைச் சேர்ந்த 4 பயணிகளும் பயணத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
