ஹெர்னியா அறிகுறிகள்
🔴தொடர்ச்சியாக வயிற்றில் வலி அல்லது இடுப்பு பகுதியில் கடுமையான வலியை சந்தித்தால், அது குடலிறக்கத்தின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த குடலிறக்கத்தை தான் ஆங்கிலத்தில் ஹெர்னியா என்று அழைப்பர்.
🔴இந்த குடலிறக்கம் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான நிலை. நிபுணர்களின் கூற்றுப்படி, குடலிறக்கம் மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் இந்த அசௌகரியமானது தானாக சரியாகாது. குடலிறக்க பிரச்சனையை அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம்.
🔴ஒருவருக்கு குடலிறக்கம் இருந்தால், அது படிப்படியாக வளர்ந்து, ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். ஆனால் அந்த அறிகுறிகள் தினசரி சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்று இருப்பதால், நிறைய பேர் அவற்றை புறக்கணித்துவிடுவார்கள். இப்படி புறக்கணிக்கும் போது சில சமயங்களில் அது தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.
🔴ஒருவருக்கு குடலிறக்கம் இருந்தால், அது படிப்படியாக வளர்ந்து, ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். ஆனால் அந்த அறிகுறிகள் தினசரி சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்று இருப்பதால், நிறைய பேர் அவற்றை புறக்கணித்துவிடுவார்கள். இப்படி புறக்கணிக்கும் போது சில சமயங்களில் அது தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.
🔴நமது அடிவயிற்றுப் பகுதியானது தசை மற்றும் வலுவான திசுக்களின் அடுக்குகளால் மூடப்பட்டிருக்கும். இந்த அடுக்குகள் தான் வயிற்றில் உள்ள உள்ளுறுப்புக்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் குடலியறக்கத்தின் போது, வயிற்றில் உள்ள தசைச்சுவற்றில் உள்ள இடைவெளி வழியே குடல் வெளியே தள்ளப்படும். இந்த குடலிறக்கத்தில் பல வகைகள் உள்ளன. இதில் பொதுவான குடலிறக்கங்கள் எனறால் அது தொப்பை அல்லது இடுப்பு பகுதிகளில் தான் ஏற்படுகின்றன.
🔴குடலிறக்கம் எவருக்கு வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் இந்த குடலிறக்கமானது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இப்போது குடலிறக்கத்தின் சில எச்சரிக்கை அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
வீக்கம்
⭕குடலிறக்கம் அடிவயிற்றில் ஏற்பட்டிருந்தால், அது வயிற்றுப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். இப்படி வீக்கம் ஏற்படும் போது, அது நெஞ்செரிச்சல், ஆசிட் ரிப்ளக்ஸ் மற்றும் நெஞ்சு வலி போன்றவற்றை ஏற்படுத்துவதைத் தவிர, சிறிது உணவை உண்டாலும் வயிறு நிறைய உணவு உண்ட உணர்வைத் தரும்.
வயிற்றில் வீக்கம் அல்லது கட்டி
⭕குடலிறக்கத்தின் மிகவும் பொதுவான அறிகுறி பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கம் அல்லது கட்டி இருக்கும். அதுவும் இந்த கட்டியானது வயிற்றில் இருந்தால், படுக்கும் போது அவை மறைந்துவிடுவதைக் காணலாம். ஆனால் நிற்கும் போதோ அல்லது குனியும் போது, அந்த கட்டி வயிற்றில் இருப்பதை உணரலாம்.
சிறுநீர், மலம் கழிப்பதில் சிரமம்
⭕குடலிறக்கத்தின் மிகவும் ஆபத்தான விளைவுகளில் ஒன்று, சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் போது மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். அதுவும் குடல் அதிக அழுத்தத்திற்கு உடபட்டால், அது தன்னிச்சையான பெரிஸ்டால்சிஸை எதிர்மறையாக பாதிக்கும்.
தொடர்ந்து வலி
⭕வயிற்றில் குடலிறக்கம் இருந்தால், அடிக்கடி மற்றும் இடைவிடாத வயிற்று வலியால் அவதிப்படக்கூடும். இந்த வலி மந்தமானது முதல் கூர்மையானது வரை இருக்கலாம். முக்கியமாக இந்த வலி அவ்வளவு விரைவில் சரியாகாது மற்றும் நீண்ட நேரம் நீடித்திருக்கும்.
எரிச்சல் உணர்வு
⭕குடலிற பிரச்சனை இருந்தால், அது உள்ள இடத்தில் மிகுதியான அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த எரிச்சல் தொடர்ந்து இருப்பதோடு, தினசரி செயல்பாடுகளை செய்யும் போது, இந்த எரிச்சல் இன்னும் தீவிரமாகும்.
மூச்சுத்திணறல்
⭕சில சமயங்களில் ஹெர்னியா கட்டுப்பாடு இல்லாமல் வளருக்கும் போது, அது நுரையீரல் அல்லது உதரவிதானத்தில் அதிக அழுத்தத்தைக் கொடுத்து மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும். எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன், மூச்சுத்திணறலை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
காய்ச்சல்
⭕தொடர்ந்து அடிக்கடி உங்களுக்கு காய்ச்சல் அதிகமாக வந்தால், அது குடலிறக்கத்தின் முக்கியமான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
மிகுந்த உடல் சோர்வு
⭕உங்கள் மேல் கால், மற்றும் இடுப்பு பகுதியில் மிகுந்த பலவீனத்தை உணர்ந்தால், அது குடலிறக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
ஹெர்னியா அறிகுறிகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்