ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்கள் இருவர் கைது!
கொழும்பு – மாளிகாவத்தை பொலிஸ்பிரிவில் 3.99 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் மாளிகாவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் அங்கொடை பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து, கிராண்ட்பாஸ் பகுதியில் 106 கிராம் ஹெரோயினுடன் மற்றொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.