ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

ஹெரோயின் போதைப் பொருளுடன் பசறையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கமேவெல தொலும்புவத்த 4 ம் கட்டை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக பசறை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய தொலும்புவத்த 4 ம் கட்டை கமேவெல பகுதியில் சந்தேகத்துக்கு இடமான இடத்தினை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்து 5 கிராம் 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது அதே பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நாளை செவ்வாய்க்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.