
ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
ஹெரோயின் போதைப்பொருளுடன் பண்டாரவளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
பண்டாரவளை நகரில் பகுதியில் ஹாரோயின் போதைப் பொருள் வைத்திருப்பதாக பண்டாரவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்து 470 மில்லிகிராம் ஹாரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
அத்தோடு பண்டாரவளை பஹல கஹட்டவெல எல்லே அளுத்கெதர பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்
