ஹெரோயின் போதைபொருளுடன் ஒருவர் கைது

நுவரெலியாவில் ஹெரோயின் போதைபொருளுடன் நானுஓயா பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் ரயிலில் போதைபொருளை விற்பனை செய்ய முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, அவரிடம் இருந்து 410 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.