
ஹெரோயினுடன் தீபாவளி கொண்டாடிய இளைஞன்: தரையில் விழுந்து மரணம்
தீபாவளி விருந்தில் அதிகளவு ஹெரோயின் உட்கொண்ட இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே, இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
கோப்பாய் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மது விருந்தில் பல்வேறு வகையான போதைப்பொருள் வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த இளைஞன் விருந்து ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக ஹெரோயின் பயன்படுத்தி வந்த நிலையில் நேற்று மாலை மயங்கி தரையில் விழுந்துள்ளார்.
இந்நிலையில் அவரது நண்பர்கள் குழு அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பல தடவைகள் தண்டிக்கப்பட்டுள்ளதுடன் போதை பொருளுக்கு அமையானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
