ஹெரோயினுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

பதுளை – ஹாலிஎல பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று புதன் கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல என பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎல பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலிஎல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய வீதியில் சென்று கொண்டிருந்த குறித்த நபரை சோதனைக்கு உட்படுத்திய போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்