ஹெரோயினுடன் இரு ஆண்கள் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திகாளி கோவில் பகுதியில் வைத்து இருவர் நேற்று வெள்ளிக்கிழமை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பனிப்புலம், பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரிடமிருந்து 2.5 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது. அத்துடன் தொட்டிலடி, சங்கானை பகுதியைச் 33 வயதுடைய நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டது.
இவர்கள் முச்சக்கர வண்டியில் ஹெரோயினை கொண்டு சென்ற வேளையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்