ஹெரோயினுடன் ஆசிரியர் கைது!

கொழும்பு பொரளையில் உயர்தரப் பிரிவு மாணவர்களுக்குக் கற்பிக்கும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை காலை வாகனத்தில் சென்ற போது வெல்லம்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து 350 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.