ஹெராயினுடன் இந்தியர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில், சுங்க திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால், 39 வயது இந்தியர் ஒருவர், 84.96 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4:15 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வந்திருந்தார்.

அவர் கொண்டு வந்த பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 2.832 கிலோ ஹெராயினை, சுங்க திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கொழும்பின் பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ளூர் போதைப்பொருள் முகவர்களிடம் ஒப்படைப்பதற்காக குறித்த நபர் ஹெரோயினை கொண்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.