ஹிருணிக்கா பிரேமசந்திர உட்பட 9 பேர் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, இன்று புதன்கிழமை காலை முதல் ஹிருணிக்கா உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட 9 பேரும் கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.