ஹினிதும முக்கொலை சம்பவம் : முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கைது!
ஹினிதும பகுதியில் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் என தெரிவிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஹினிதும தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர், T.56 துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் 28 T-56 தோட்டா உறைகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.