ஹிஜாப் சர்ச்சை : 5 அரசுசாரா நிறுவனங்கள் பணிகளை நிறுத்தியது
ஐந்து அரசு சாரா நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு எதிராக தலிபான் ஆட்சி விதித்த தடைகளை தொடர்ந்து இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேவ் தி சில்ட்ரன், நோர்வே அகதிகள் கவுன்சில், கேர் இன்டர்நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் ரெஸ்க்யூ கமிட்டி ஆகியவை ஆப்கானிஸ்தானில் தங்கள் செயல்பாடுகளை இடைநிறுத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் அடங்கும்.
அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் ஆப்கானிஸ்தான் பெண்கள் ஹிஜாப் அணியாததால் தலிபான்களால் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.