ஹிஜாப் உடையை எரித்து போராட்டம் : பெரும் பரபரப்பு
ஈரானில் இடம்பெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பெண்கள் ஹிஜாப் உடையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிக்கோடு நகர மண்டப பகுதியில் ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இஸ்லாமிய சுதந்திர சிந்தனை என்ற அமைப்பு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் ஹிஜாப்பை எரித்து , ஹிஜாப் அணிவதற்கு தமது எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக நாடுகளில் பல பகுதிகளில் ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் கேரள மாநிலத்தில் முதல் முறையாக ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆறு முஸ்லிம் பெண்கள் ஹிஜாப்களை எரிக்கும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கினர். ஹிஜாப் எரிப்பு சம்பவம் இந்தியாவில் பதிவாகும் முதல் சம்பவம் இதுவாகும்.