
ஹாலிஎல பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடை
-பதுளை நிருபர்-
தற்போது பெய்து வரும் கடும் மழையின் காரணமாக ஹாலிஎலயில் இருந்து கெடவல செல்லும் பிரதான வீதியின் கீரியகொல்ல பகுதியில் பாரிய மண்மேட்டுடன் மரங்களும் வீதியில் சரிந்து விழுந்தமையினால் குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் மண்மேட்டை ஹாலிஎல பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் இணைந்து மண்மேட்டை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
