
ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது
-பதுளை நிருபர்-
பதுளை ரிதிபான பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்
பதுளை ரிதிபான பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 5700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சந்தேக நபர் முச்சக்கரவண்டி சாரதியாக கடமையாற்றுவதாகவும் சந்தேக நபர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்
