
ஹாபிஸ் நஸீர் அஹமடின் வாழ்த்துச் செய்தி
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படவுள்ள இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் வரவேற்பதாக முன்னாள் முதலமைச்சரும் சுற்றாடல்துறை அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் காலி முகத்திடலில் நடைபெறவுள்ள இவ்விழாவை இலங்கையின் வரலாற்றில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்தவர்களான முஸ்லிம் சமூகமும் தேசப்பற்றுடன் அனுஷ்டிக்கிறது.
சுதந்திர இலங்கை அதன் வரலாற்றில் பல சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளது. இனி வரும் காலங்களிலும் இலங்கையின் மூத்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவின் தலைமையில், எதிர்நோக்கும் எந்த சவால்களும் இலகுவாக தீர்த்து வைக்கப்படும் என்றுஉறுதியாக நம்புகிறேன்.
இலங்கையின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் வாய்ப்பாக இவ்வருட சுதந்திர தின விழாவை பார்க்க முடியும்” என்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் சுற்றாலடல்துறை அமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
