ஹரக் கட்டா மீது PTA நடவடிக்கை

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினரான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன, சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை காவலில் வைக்கப்படுவார் என்று சட்டமா அதிபர் இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில், அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவார் என்றும் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.