ஹரக் கட்டாவை கொலை செய்ய முயற்சித்த பெக்கோ சமனின் சகா கைது

ஹரக் கட்டா என்று அழைக்கப்படும் நடுன் சிந்தகவை பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு படுகொலை செய்ய முயற்சித்த  பெக்கோ சமனின் சகா ஒருவரை மஹரகமவில்  இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள  ஹரக் கட்டாவை பத்திரிகையாளர் போல் மாறுவேடமிட்டு நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக் கொல்லத் தயாரான ஒருவரே இவ்வாறு மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெஹல்பத்தர பத்மேவின் உத்தரவின் பேரில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபரிடமிருந்து வீடியோ கெமரா மற்றும் துப்பாக்கி என்பன மீட்கப்பட்டன.