ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பிலியந்தலை பிரதேசத்தில் 285 மில்லியன் பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளனர்.
சந்தேகநபர்களான 41 வயதான ஓமல்பகே தம்மிக்க சமன் குமார மற்றும் 53 வயதான கங்கணம் ஆராச்சிகே சுஜீவ ஆகியோர் பிரபல போதைப்பொருள் மற்றும் “ஹரக் கட்டா” மற்றும் “ஆர்மி சூட்டி” போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளுடன் தொடர்புடையவரகளென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
