ஹப்புத்தளை நகரில் விபத்து: தந்தையும் 3 வயது குழந்தையும் காயம்

-பதுளை நிருபர்-

ஹப்புத்தளை நகரில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று வயது குழந்தையும் 37 வயதுடைய தந்தையுமே இவ்வாறு விபத்தில் காயமடைந்து ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த லொறி மீது வீதியை கடக்க முற்பட்ட தந்தையும் குழந்தையும் மோதுண்டு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளானவர்கள் பாலகொல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஹப்புத்தளை பகுதியில் உள்ள உறவினர் வீடொன்றிற்கு வந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.