ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரம்
-நானுஓயா நிருபர்-
மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் காற்று காரணமாக, மரங்கள் விழுவது அதிகரித்துள்ளது.
நோர்வூட் ஓல்டன் பகுதியில் ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குறித்த மரத்தைச் சுற்றியுள்ள தோட்டத் தொழிலாளர்கள் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதியில் முறிந்து விழும் நிலையில் அதிக மரங்கள் அபாயகரமான நிலையில் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர் .