ஹட்டன் மக்களின் புகார்

-மஸ்கெலியா நிருபர்-

ஹட்டன் அரச பேருந்து நிலையத்தின் முக்கியஸ்தர்களின் கவனத்திற்காக அப்பகுதி மக்கள்,

நீண்ட நாளைக்கு பிறகு மறே பேருந்து சேவைக்கு இப்படி ஒரு பேருந்தினை சேவையில் ஈடு படுத்துவது முறை தானா, நாளாந்தம் இம்மாதிரியான ஒதுக்கப்பட்ட அல்லது பராமரிப்பற்ற பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துகிறார்கள்.

இது மக்களின் பாதுகாப்புக்கு உகந்ததா?, பயணிகளின் மேல் ஹட்டன் இ.போ.சபைக்கு கரிசனை உள்ளதா.

துருப்பிடித்த அல்லது பாசி படிந்த அதிகமான சத்தம் கொண்ட பேருந்துகளை மாத்திரமே இந்த பாதைக்கு சேவையில் ஈடு படுத்தும் போது அது செல்லும் சாலை எவ்வாரானது எவ்வளவு தூரம் பயணிகள் பயணிக்க வேண்டும் என்பது தாங்களுக்கு தெரியாதா?.

தினம் காலை 7 மணிக்கு பாடசாலை செல்லும் மாணவர்கள் வைத்தியசாலைக்கு செல்லும் கர்ப்பிணி தாய்மார்கள் முயோதிபர்கள் என யாவரும் பயணிக்கும் பேருந்து இவ்வாறு இருப்பது சரியானதா?.

சிவனொளிபாத யாத்திரை காலங்களில் மாத்திரம் புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் இ.போ.ச ஏன் இவ்வாறு செயல் படுகிறது சாதாரண மக்கள் பயணிப்பதில் விருப்பம் இல்லையா?.

தனியார் பேருந்துகளின் தரத்தினை சோதனை செய்து அதனை தரமான சேவையை வழங்க உத்தரவிடும் அதிகாரிகளின் கண்களுக்கு இந்த பேருந்தின் நிலை தெரியவில்லையா?.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சிவனொலிபாத யாத்திரை காலங்களில் இந்த மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் இ.போ.ச சொந்தமான பஸ்களில் அதிகாமான வருமானம் கிடைக்கிறது.

எனவே தயவு செய்து தரமான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி சேவையினை வழங்கி மக்களின் உயிர்களுக்கு நன்மதிப்பை வழங்குங்கள் என அப் பகுதியில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் முதியோர்கள் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் இவ்வாறு புகார் தெரிவித்தனர்.