ஹட்டன் பேருந்து விபத்து: சாரதிக்கு விளக்கமறியல்
ஹட்டன் – மல்லியப்பு பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை பேருந்தின் சாரதி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த ஹட்டன் பதில் நீதவான் எஸ்.ராமமூர்த்தி, சந்தேகநபரான சாரதியின் உடல்நிலை குறித்து ஆராய்ந்த பின்னர், அவரை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த சாரதி நாவலப்பிட்டி- திஸ்பனை பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சாரதி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, கினிகத்ஹேன பகுதியில் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.