ஹட்டன் பேருந்துசாலைக்கு இலாபம்
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஹட்டன் பேருந்துசாலையில், ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எமது செய்திச்சேவைக்குக் கருத்துரைத்த ஹட்டன் பேருந்துசாலையின் உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17, 18 மற்றும் 19ஆம் திகதிகளில் அதிகளவானோர் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற நிலையில் குறித்த இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.
பண்டிகையின் போது ஹட்டன் பேருந்துசாலைக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 90 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
