ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று பிற்பகல் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த நால்வரும் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டகலை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்