-மஸ்கெலியா நிருபர்-
தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக வர்த்தகம் செய்ய வந்த சில விற்பனையாளர்கள் ஹட்டன் நகரின் பல்வேறு இடங்களில் பொலிதீன் பொருட்களை வைத்துள்ளனர்.
மேலும் ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்றம் பொலிதீன் பொருட்களை அகற்ற கூடுதல் தொழிலாளர்களை நியமிக்க வேண்டியுள்ளது.
ஹட்டன் நகரத்தில் உள்ள சில தற்காலிக விற்பனையாளர்கள் மற்றும் சில மூலிகை கடை ஊழியர்கள் நகரின் பல்வேறு இடங்களில் பொலிதீன் பொருட்களை வைப்பது குறித்து நகரத்தில் பலர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஒரு சிலர் வடிகால்களிள் அதிக அளவில் கழிவு பொருட்கள் மற்றும் பொலீத்தின் விட்டு சென்று உள்ளதால் இப்பகுதியில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக அந்த அனைத்து கழிவுகளும் வெள்ளத்தில் அடித்துச் சென்று காசல்ரீ நீர்த்தேக்கத்தினை மாசுபடுத்துகிறது சம்பந்தப்பட்ட ஹட்டன் நகர சபை மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் உடன் கவணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.\



