
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 02 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்தொன்றும், ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்கியுள்ளன.
இந்த விபத்தில் வேனும், பேரூந்தும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் விபத்து காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்