இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி விபத்து

ஹட்டன் – நோட்டன் பிரதான வீதியின் வனராஜா பகுதியில் இரு முச்சக்கரவண்டிகள் ஒன்றோடுவொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் பலத்த சேதம் ஒருவர் கடும் காயமுற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் டிக்கோயாவிலிருந்து காசல்ரி பகுதியை நோக்கிச் சென்ற முச்சக்ரவண்டியும் சவுத்வனராஜா பகுதியிலிருந்து அட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிக வேகமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்த பொலிஸார் விபத்துக்குள்ளான இரு முச்சக்கர வண்டிகளும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்