ஹட்டனில் காலணி கடையில் பாரிய தீ விபத்து!
-நுவரெலியா நிருபர்-
ஹட்டன் பிரதான நகரில் காலணிகள் விற்பனை செய்யும் வியாபார நிலையமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது .
கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியது. ஹட்டன் டிக்கோயா மாநகரசபை தீயணைப்புத் பிரிவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதன்போது. பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள காலணிகள் முற்றிலுமாக எரிந்து சேதமானது எனவும், சேத விபரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், தீவிபத்தால் குறித்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலணிகள் எரிந்ததால் எழுந்த துர்நாற்றம் மற்றும் புகை மண்டலத்தால் அப்பகுதியில் இருந்த மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு தெரிவித்தனர் .